Google Assistantடில் பிள்ளைகளுக்கான அம்சங்களில் இருந்து ஆடியோ தகவல்கள் சேகரிக்கப்படுவது குறித்த தனியுரிமை அறிக்கை
குடும்பங்களுக்கேற்ற Assistant செயல்கள், YouTube Kids வீடியோக்கள் போன்ற பிள்ளைகளுக்கான அம்சங்களை Google Assistant மூலம் பயனர்கள் பயன்படுத்தும்போது குரல் & ஆடியோ தகவல்களை எப்படிச் சேகரிக்கிறோம் என்பதைப் பெற்றோர்கள் புரிந்துகொள்ள உதவ விரும்புகிறோம். Google Assistantடில் இந்த அம்சங்களைப் பயன்படுத்துவதற்கு Google தனியுரிமைக் கொள்கையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுடன் கூடுதலாக இந்தத் தனியுரிமை அறிக்கையில் உள்ள தகவல்களும் பொருந்தும்.
தங்கள் நாட்டில் பொருந்தக்கூடிய வயதுக்குட்பட்ட பிள்ளைகளின் Google கணக்கை Family Link மூலம் பெற்றோர்கள் உருவாக்கியிருந்தால், அந்தப் பிள்ளைகள் Google Assistant வசதியுள்ள பெரும்பாலான சாதனங்களுடன் தங்கள் கணக்குகளை இணைக்கலாம். குரலைப் பயன்படுத்தி நீங்கள் Assistantடுடன் உரையாடும்போது குரல் & ஆடியோ ரெக்கார்டிங்கை உங்கள் Google கணக்கில் சேமிக்க வேண்டுமா என்பதை 'இணையம் & ஆப்ஸ் செயல்பாடு' அமைப்பின் கீழ் உள்ள "ஆடியோ ரெக்கார்டிங்கைச் சேர்" எனும் விருப்பத்தின் மூலம் கட்டுப்படுத்தலாம். Google கணக்கை உருவாக்கும்போது இந்த விருப்பம் இயல்பாகவே முடக்கப்பட்டிருக்கும். Assistantடைப் பயன்படுத்த இதை இயக்க வேண்டிய அவசியமில்லை. 'இணையம் & ஆப்ஸ் செயல்பாடு' அமைப்பின் கீழ் உங்கள் பிள்ளையின் "ஆடியோ ரெக்கார்டிங்கைச் சேர்” எனும் விருப்பம் தேர்வுசெய்யப்பட்டிருந்தால், அவர் உள்நுழைந்துள்ள ஒரு சாதனத்தில் Assistantடுடன் உரையாடும்போது அந்த உரையாடலின் ரெக்கார்டிங்கும் அதற்கு முந்தைய சில விநாடிகளின் ரெக்கார்டிங்கும் அவரது கணக்கில் சேமிக்கப்படலாம்.
Family Linkகைப் பயன்படுத்தி உங்கள் பிள்ளைக்காக ஒரு புதிய கணக்கை உருவாக்கியிருந்தால், அந்த Google கணக்கில் உள்நுழைந்து அவரது ஆடியோ ரெக்கார்டிங்கை நீங்கள் அணுகலாம், திருத்தலாம், அகற்றலாம், பதிவிறக்கலாம். பிள்ளையின் கடவுச்சொல்லை நீங்கள் மறந்துவிட்டால் Family Link ஆப்ஸ் மூலமாகவோ இணையத்தில் Family Link அமைப்புகள் மூலமாகவோ அதை மீட்டமைக்கலாம். உள்நுழைந்தபிறகு, கணக்கில் உள்ள ஏதேனும் செயல்பாட்டை நீக்குவது உட்பட உங்கள் பிள்ளையின் ஆடியோ ரெக்கார்டிங் அமைப்புகளையும், அவரது கணக்கில் சேமிக்கப்பட்டுள்ள ஆடியோ ரெக்கார்டிங்கையும் நிர்வகிக்க Google தனியுரிமைக் கொள்கையில் ( Google செயல்பாட்டுக் கட்டுப்பாடுகள் போன்றவை) விவரிக்கப்பட்டுள்ள பல்வேறு கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தலாம்.
உங்கள் நாட்டில் குறைந்தபட்ச வயதுவரம்பு மாற்றப்படுவதற்கு முன்பாக உங்கள் பிள்ளை கணக்கை உருவாக்கியிருந்து, அதை அவரே வைத்துக் கொள்ள நீங்கள் பின்னர் அனுமதி வழங்கியிருந்தால், அவரது கணக்கின் கடவுச்சொல்லை மீட்டமைக்கவோ அதில் உள்நுழையவோ அவருடைய அனுமதி உங்களுக்குத் தேவைப்படலாம்.
ஆடியோ ரெக்கார்டிங்கைச் சேர்க்கத் தேர்வுசெய்யப்பட்ட Family Link மூலம் நிர்வகிக்கப்படும் ஒரு Google கணக்கைப் பயன்படுத்தாமல்குடும்பங்களுக்கேற்ற Assistant செயல்கள், YouTube Kids வீடியோக்கள் போன்ற சிறுவர்களுக்கான அம்சங்களை நீங்கள் Google Assistant மூலம் அணுகினால் குறுகிய நேரத்திற்கு அந்த உரையாடல்களின் குரல் & ஆடியோ ரெக்கார்டிங்கைச் சேகரிப்போம். ஆடியோ அம்சத்தைப் பயன்படுத்துவதற்கு இந்தத் தகவல் செயலாக்கப்படும். இதன் மூலம் அந்த உரையாடலை நாங்கள் நிறைவு செய்ய முடியும். சேமிக்கப்பட்டவை அதன்பிறகு உடனடியாக நீக்கப்படும்.
கடைசியாகத் திருத்தப்பட்ட தேதி: செப்டம்பர் 2, 2021